ஓமலூரில் சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்தவர் கைது
Omalur;
Update: 2023-12-01 04:14 GMT
ஆகாஷ்
சேலம் மாவட்டம் , ஓமலூர் பேரூராட்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர்,இரண்டு நம்பர் மற்றும் கேரள லாட்டரி விற்பனை செய்து வருவதாக ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஓமலூர் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஓமலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊமைமாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் அமலான் என்பவருடைய மகன் ஆகாஷ் செல்போன் மூலம் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்து வருவதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.