சட்ட விரோத மணல் திருட்டு- 3பேர் கைது
கடையம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து டிராக்டர் மற்றும் மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
Update: 2023-10-22 08:02 GMT
மணல் திருட்டு
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் பட்டி பகுதியில் சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி மூன்று டிராக்டர்களில் மணல் திருடிச் சென்ற திரவியதகர் செல்லதுரை என்பவரின் மகன் மாரியப்பன்(45), ராமா என்பவரின் மகன் ராஜன். அழகப்பபுரம் சாமிநாதன் என்பவரின் மகன் ராஜா(20) மீனாட்சிபுரம் நாராயணன் என்பவரின் மகன் ரவி(37) ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து மாரியப்பன், ராஜா மற்றும் ரவி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார் மேலும்அவர்களிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய மூன்று டிராக்டர் மற்றும் மூன்று யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.