சட்டவிரோதமாக புகையிலை விற்றவர் கைது

குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்ற நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-30 09:58 GMT

சட்டவிரோதமாக புகையிலை விற்றவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், சந்தியா, முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஓலப்பாளையம், பள்ளிபாளையம் சாலை, சேலம் சாலை சரவணா தியேட்டர் உள்ளிட்ட பகுதியில் அனுமதி இல்லாமல் மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மது விற்ற வேல், 48, குமரேசன், 48, ராஜதுரை,  50, ஆகிய மூன்று நபர்களை கைது செய்து, தலா 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரத்தினசாமி, 65, என்பவர்  கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 230 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினார்கள்.
Tags:    

Similar News