சட்டவிரோதமாக மது பாட்டில் விற்றவர் கைது
மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்;
Update: 2023-12-21 05:15 GMT
சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டனர் கைது
தியாகதுருகம் அடுத்த புக்குளம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் வாகன ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அரச மரம் அருகே நின்று கொண்டிருந்த காந்தி நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஆறுமுகம், 50; என்பவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 7 மது பாட்டில்களை கைப்பற்றினர்.