இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயில் தேரோட்டம்
இலுப்பூர் ஸ்ரீ சொண்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் திருக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்வாசி நாதர் சமேத சொர்ணாம்பிகை திருக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். இக்கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது இதில் முக்கிய விழாவாக சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்வுடன் கடந்த ஏப்ரல் 15-ம்தேதி கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. விழாவை ஒட்டி தினம்தோறும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ சொண்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் தேரில் எழுந்தருளினார். அதை தொடர்ந்து மாலை 5.25 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மண்டகபடி உபயதாரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கிவைத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர். நகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்த திருத்தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடையும் தொடர்ந்து நாளை மாலை 4 மணியளவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது தொடர்ந்து 7 மணியளிவில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.