மக்களுடன் முதல்வர் முகாம் - அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
மயிலாடுதுறை நகரில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் பல்வேறு சான்றிதழ் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றண;
Update: 2023-12-22 09:24 GMT
மக்களுடன் முதல்வன் திட்டம்
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் உள்ள, திருமஞ்சனவீதி பாலலெட்சுமி திருமண மண்டபத்தில், நடைபெற்ற "மக்களுடன் முதல்வர்"சிறப்பு முகாமில், பிறப்பு சான்றிதழ் வேண்டி மனு அளித்த மனுதாரருக்கு உடனடியாக நகராட்சி சார்பில், பிறப்பு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். உடன் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சங்கர் , மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சம்பத் மற்றும் ரஜினி ஆகியோர் உள்ளனர்.