ஸ்ரீபெரும்புதுார் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்துள்ள பறிமுதல் வாகனங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-06-29 06:36 GMT

தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறுகுற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகளின் போது போலீசாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையம் வளாகத்திலும், காவல் நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக வெயில், மழையில் மக்கி வீணாகி வருகின்றன. மண்ணோடு மண்ணாக துருப்பிடிக்கும் வாகனங்களால், அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால், ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும், ஸ்ரீபெரும்புதுார் மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், மண் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் லாரி, ஜே.சி.பி., உள்ளிட்ட கனரக வாகனங்கள், சென்னை -- பெங்கரூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாவதுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது. எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அங்கிருந்து அப்புறப்படுத்தி, ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News