விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை - ஆட்சியர் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மாணவ&மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் போன்றவற்றில் பணிபுரியும் மகளிர் விடுதி மற்றும் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 107 தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் பணிபுரியு-ம் மகளிர் விடுதிகளும் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு உரிமம் பெற்ற பிறகே செயல்பட வேண்டும்.இதனால் பதிவு செய்யாத விடுதிகள் http:tnswp.com என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம் அல்லது வாடகை கட்டிட ஒப்பந்தம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று, சுகாதார சான்று உள்ளிட்ட ஆவணங்களால் விடுதி மற்றும் இல்லங்களை பதிவு செய்யலாம். வருகிற 30&ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.