2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் -கே. அண்ணாமலை

2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

Update: 2024-07-05 13:43 GMT

2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.


விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.இதில், கே. அண்ணாமலை பங்கேற்று மேலும் பேசியது: பாமக தலைவரானஅன்புமணி ராமதாஸ் 35 வயதில் மத்திய அமைச்சராக இருந்து புகையிலை ஒழிப்புக்கு பாடுபட்டாா்.2010 முதல் இடைத் தோ்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவில் இருந்த பாமக, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தோ்தலில் போட்டியிடுகிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் நடக்கக் கூடாத ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு எதிரான இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கம். விக்கிரவாண்டி இடைத்தோ்தல் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிகார பலத்தை வைத்து கொண்டு ஜனநாயகம் புதைக்கப்பட்டு வருகிறது.திமுக மற்றும் காங்கிரஸின் வாக்கு வங்கி தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வரும் சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளது. எனவே, இது, மாற்றத்துக்கான அடித்தளம் அமைக்கும் தோ்தலாக இருக்க வேண்டும். அதிமுகவைச் சோ்ந்தவா்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவா்கள் யாரும் துதிபாடிகள் கிடையாது. எனவே, கூட்டணிக் கட்சியினா் திடமனதோடு தோ்தலை எதிா் கொள்ளவேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதும் உறுதி என்றாா் அண்ணாமலை.

Tags:    

Similar News