சிறுவன் வாகனம் ஓட்டிய வழக்கில் உரிமையாளருக்கு அபதாரமும் ஓர் ஆண்டுக்கு வாகன உரிமம் ரத்து !!

பாபநாசத்தில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும் ஓர் ஆண்டுக்கு வாகன உரிமம் ரத்து பாபநாசம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-06-01 11:20 GMT

 நீதிபதி அப்துல் கனி 

பாபநாசத்தில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும் ஓர் ஆண்டுக்கு வாகன உரிமம் ரத்து பாபநாசம் நீதிபதி உத்தரவு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார்கள் பாபநாசம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது பாபநாசம் ரயிலடியை சேர்ந்த முகமது என்பவர் தனது மகனை இரு சக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட அனுமதித்தது தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது.

வாகன உரிமையாளர் முகமது என்பவருக்கு ரூ. 25ஆயிரம் அபதாரமும் 1 ஆண்டு வாகன உரிமம் ரத்தும் செய்து பாபநாசம் நீதிபதி அப்துல் கனி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News