விலை உயர்ந்த பூண்டால் பொதுமக்கள் அதிர்ச்சி !
திண்டுக்கல் மாவட்டத்தில் பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு மேலும் 2 மாதங்களுக்கு தொடரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-28 07:06 GMT
. பூண்டு விலை உயர்வு
வெள்ளை தங்கம் என்று வர்ணிக்கப்படும் பூண்டு இல்லாமல் குழம்பு கிடையாது. அசைவ உணவுகள் பூண்டு இல்லாமல் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை. பூண்டுதான் உயிர் நாடியாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளான மன்னவனூர், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, குண்டுப்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் விளைவிக்கப்பட்ட பூண்டு கடந்த 3 மாதங்களாக ஒரு கிலோவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வானது மேலும் 2 மாதங்களுக்கு தொடரும் என பூண்டு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.