பூண்டு விலை வீழ்ச்சி !
காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் 1கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 05:36 GMT
பூண்டு
தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பூண்டு அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இரு மாதங்களுக்கு முன் கிலோ பூண்டு 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடமாநிலங்களில் பூண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், இம்மாதம் துவக்கத்தில் விலை கடுமையாக உயர்ந்து, அதிகபட்சமாக கிலோ பூண்டு 500 - 550 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டு வரத்து துவங்கியுள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் 1கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.