காஞ்சிபுரத்தில் விடுமுறை நாட்களில் ஒருவழிப்பாதையாக மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரத்தில் விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில், இப்பகுதியை ஒரு வழிபாதையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-06-18 11:39 GMT

போக்குவரத்து நெரிசல்

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும், உலகளந்த பெருமாள் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், சங்குபாணி விநாயகர் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் இக்கோவில்களுக்கு வருவோர் தங்களது வாகனங்களை, காமாட்சியம்மன் கோவில்,

உலகளந்தார் மாட வீதியில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்கின்றனர். மேலும், இப்பகுதியில் இயங்கும் பல்வேறு லாட்ஜ்களில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாமல் இயங்கி வருவதால், லாட்ஜிற்கு வருவோர்,

தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இந்நிலையில், விடுமுறை மற்றும் முகூர்த்த தினமான நேற்று உலகளந்த பெருமாள் மாட வீதி, காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் நிறுத்தப்பட்ட வாகனங்களால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. நெரிசலில் சிக்கிய பாதசாரிகள்,

இருசக்கர வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்வதற்குகூட வழியில்லாமல் சிக்கி தவித்தனர். எனவே, உலகளந்த பெருமாள் மாட வீதி, காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் வாகனங்களை நிறுத்த தடைவிதிப்பதோடு, பார்க்கிங் வசதி இல்லாமல் செயல்படும் லாட்ஜ்களுக்கு அனுமதி ரத்து செய்யவும்,

விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில், இப்பகுதியை ஒரு வழிபாதையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News