மேல்மங்கலத்தில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் 5 வீடுகள் சேதம்
மேல்மங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் 5 வீடுகள் சேதம் அடைந்தது.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் 5 வீடுகள் சேதம் டிரானனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள விநாயகர் கோவில் முன்பாக 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் ஆலமரம் சாய்ந்து விழுந்தது.
ஆலமரம் சாய்ந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள ஐந்து வீடுகள் சேதம் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருந்த 3 மின்கம்பங்களும் சாய்ந்ததால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆலமரம் சாய்ந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்த பொழுது தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
அதேபோல் முத்தையா கோவில் செல்லும் சாலையில் இருந்த டிரான்ஸ்பார்ம் முடிந்து சாய்ந்ததில் அந்த சாலையில் இருந்த 8 மின் கம்பங்களும் ஒடிந்து சாய்ந்தது. அப்பொழுதும் அந்த சாலையில் பொதுமக்கள் வாகனங்கள் செல்லாது இருந்ததால் நல்வாய்பாக பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் செல்லாத நிலையில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை,
மேலும் டிரான்ஸ்பார்ம் மற்றும் மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால் நேற்று மாலை முதல் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்மங்கலம் ஊராட்சி நிர்வாகம் சாய்ந்த ஆலமரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.