நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 90 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் இன்று நடைபெற்ற வார சந்தையில் ரம்ஜான் மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது

Update: 2024-04-09 07:02 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறும் கடந்த இரண்டு வாரங்களாக அதியமான் கோட்டை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு சந்தையாக அதியமான் கோட்டையில் நடைபெற்ற நிலையில் திருவிழா முடிவடைந்து.

இன்று வழக்கம் போல் சந்தை காலை 6 மணிக்கு கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் மற்றும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் நடைபெற உள்ள நிலையில் ஆடுகள் வர்த்தகம் விறுவிறுப்பாக நடைபெற்றது.சிறிய ஆடுகள் 3 ஆயிரம் ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானதும் மேலும் இன்று ஒரே நாளில் 90 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News