பழனியில் முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Update: 2024-06-22 11:37 GMT
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழனி கோவிலின் புகைப்படங்களை முப்பரிமாண காட்சி மூலம் பக்தர்கள் பார்க்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, படிப்பாதை, யானைப்பாதை, மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்கள், மலைக்கோவிலின் உள் மற்றும் வெளி பிரகாரம், தங்க கோபுரம், ராஜகோபுரம் உள்ளிட்ட சன்னதிகளை முப்பரிமாண காட்சிகளில் பார்க்கும்போது நேரில் கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கும் உணர்வை பக்தர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.