பழனியில் பக்தர்கள் செல்லும் தனி பாதை ஆக்கிரமிப்பு
பழனியில் பக்தர்கள் செல்லும் தனி பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 16:20 GMT
பழனி பாதையாத்திரை பக்தர்கள் விபத்தில் சிக்காமல் செல்வதற்காக ரூ 5 கோடியில் தனி பாதை அமைக்கப்பட்டது. இதை முன்னாள் எம்பி சித்தன் இருந்த காலத்தில் செய்தார். ஆனால் அந்த ரூ.5 கோடியும் அம்போவாகியுள்ளது. ரோடு போட்ட இடமே தெரியாமல் தனிப்பாதை அமைக்கப்பட்ட சுவடு தெரியாமல் போய்விட்டது.
அந்த தனி பாதையை பலர் ஆக்கிரமித்து தங்கள் கடைகளை வைத்துள்ளனர். இதனால் அரோகரா கோசத்துடன் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குண்டும், குழியுமான ரோடுகள் , தனிப்பாதையில் விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். பக்தர்களுக்கு இடையூறுக்கு மேல் இடையூறு ஏற்படுகிறது.