பனைமடல் பகுதியில் சூறாவளி காற்றால் வாழை,பாக்கு மரம் சாய்ந்து சேதம்
ஆத்தூர் அருகே பனைமடல் கிராமத்தில் சூறைக்காற்றால் வாழை மரம், பாக்குமரம் உள்ளிட்ட விவசாயி பயிர்கள் கீழே சாய்ந்து சேதம அடைந்தது.
Update: 2024-05-08 14:55 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பனை மடல் கிராமத்தில் சுமார் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் நெல், வாழை மரம் , மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வந்துள்ளனர். நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் ௯டிய மழை ஒருமணி நேரமாக பெய்துள்ளது.
இதனால் நெல், வாழைமரம்,பாக்குமரம் உள்ளிட்ட பயிர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயி பயிர்கள் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் கீழே சாய்ந்து சேதம்மடைந்த்து இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உடனடியாக தகுந்த நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.