சேலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரம் திருட்டு

சேலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரம் திருட்டு. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது.

Update: 2024-04-02 10:27 GMT

கைது 

சேலம் பள்ளப்பட்டி பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு சாமிநாதபுரம் பெரிய கிணறு பகுதியை சேர்ந்த பூசாரி காளிதாஸ் (வயது 64) என்பவர் கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் அதிகாலை வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு இருந்த உண்டியலில் பணம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பூசாரி காளிதாஸ் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில் அருகே சந்தேகப்படும்படி மொபட்டில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் திருவாக்கவுண்டனூர் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் சந்தோஷ் (வயது 22) மற்றும் 17, 15 வயது உடைய சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் 3 பேரும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து ரூ.6 ஆயிரத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரை கைது செய்த போலீசார், சந்தோஷை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 2 பேரையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மொபட் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News