சிவகாசியில் பூ பல்லாக்கில் சயன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா

சிவகாசியில் சித்திரை 7ஆம் திருவிழாவில் பூ பல்லாக்கில் சயன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

Update: 2024-05-07 13:05 GMT
சிவகாசியில் சித்திரை 7ஆம் திருவிழாவில் பூ பல்லாக்கில் சயன கோலத்தில் எழுந்தருளி வீதி உலா..

 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி இந்து நாடார்கள் கொத்தமார்கள் மகமைப்பண்டுக்கு சொந்தமான மண்டகப்படி மண்டபத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மன் இன்று அதிகாலை,ஸ்ரீபத்திரகாளியம்மன் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி, தவக்கோலத்தில் நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் கடைக்கோவிலுக்கு வருகை தந்து, வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

சித்திரை திருவிழாவின் 7ம் திருவிழாவை முன்னிட்டு,சிவகாசி நகரின் முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.சித்திரை திருவிழாவின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான 7ம் திருவிழாவில் சிவகாசி இந்து நாடார்கள் கொத்தமார்கள் மகமைப்பண்டு மண்டகப்படியிலிருந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் பூ பல்லாக்கில் சயன திருக்கோலத்தில் எழுந்தருளி,பின்னால் சீர்வரிசையுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபயதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags:    

Similar News