சூரியகாந்திக்கு போதிய விலை இல்லை : அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை பகுதியில் சூரியகாந்திக்கு போதிய விலை இல்லாததால் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Update: 2024-04-22 11:40 GMT
ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை பகுதியில் அதிகம் பயிரிடப்படும் முக்கிய பயிரான சூரியகாந்தி குறைந்த நீரில் மூன்று மாதங்களில் பயன் தரக்கூடிய இந்த பூவில் உள்ள விதைகளை வெளியூர் வியாபாரிகள் கிலோ 60- முதல் 70 வரை அவர்களே விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கிறனர். இதனால் தங்களுக்கு போதிய விலை இல்லை எனவும் அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.