பேராவூரணியில், மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
பேராவூரணியில், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 595 மனுக்கள் பெறப்பட்டன
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் தொடங்கிய இம்முகாமில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் எரிசக்தி துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நல வாரியம், கூட்டுறவுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகிய துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இ
தில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ. பழனிவேல், பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல்,
அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத் துறை பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், அனைத்து துறை சார்பில், சுமார் 595 மனுக்கள் பெறப்பட்டன. உடனடி நிவாரணம் இந்த முகாமில் பேராவூணியை அடுத்த நாட்டாணிக்கோட்டையை சேர்ந்த சஞ்சீவி என்ற 76 வயது முதியவர் தன்னால் நடக்க முடியவில்லை எனவும், தான் பயன்படுத்தி வரும் நடைக்கருவி (வாக்கர்) சேதமடைந்துள்ளதால், புதிதாக வழங்க வேண்டும் என மனு அளித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் அந்த முதியவரை அழைத்து, உடனடியாக தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து நடைகருவியை (வாக்கர்) வாங்கி அங்கேயே அந்த முதியவரிடம் அளித்தார். 'மனு கொடுத்து வைப்போம், கிடைத்தால் கிடைக்கும்' என்று வந்த முதியவர் உடனடியாக கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.