சேலம் சூரமங்கலத்தில் கட்டுமான நிறுவனம் திறப்பு விழா

சூரமங்கலத்தில் உள்ள ஹரகரா காம்ப்ளக்சில் `மை ப்ராப்பர்ட்டீஸ் இந்தியா' என்ற தனியார் ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனம் திறப்பு விழா நடைப்பெற்றது.

Update: 2024-02-24 11:19 GMT

 நிறுவனம் திறப்பு விழா

சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஹரகரா காம்ப்ளக்சில் `மை ப்ராப்பர்ட்டீஸ் இந்தியா' என்ற தனியார் ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனம் திறப்பு விழா நடந்தது. மேச்சேரி கைகாட்டி வெள்ளார் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சேவா அறக்கட்டளை தலைவர் உரக்கடை ஆறுமுகம் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நிறுவனத்தை திறந்து வைத்தார். நிறுவனத்தின் இயக்குனர்கள் தங்கவேல், முருகேசன், கிருபானந்தன், கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்று முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். ரமேஷ் அசோசியேட்ஸ் ஆடிட்டர் ஆதித்யா, ஜெயசக்தி குரூப் ஆப் கம்பெனி ரங்கசாமி, சீலா என்டர்பிரைசஸ் சம்பத்குமார், முன்னாள் மண்டல குழு தலைவர்கள் அசோகன், மோகன், ஆடிட்டர் ஸ்ரீதர், காஸ்மஸ் கிளப் செயலாளர் மணிவாசகம், வக்கீல்கள் மணிவண்ணன், மாதேஸ்வரன், கார்த்திக் கன்ஸ்ட்ரக்சன் கார்த்திக், கே.கே.டி.ஆர். கன்ஸ்ட்ரக்சன் வாசுதேவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காமராஜ், கார்த்திக், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன், முன்னாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, முன்னாள் வேளாண்மை அலுவலர்கள் ராஜேந்திரன், சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் அரியானூர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் ரவிக்குமார், மேச்சேரி எம்.எம்.சில்க்ஸ் சேர்மன் முருகேசன், ஜோதி பைனான்ஸ் தலைவர் கோபாலகிருஷ்ணன், துறையூர் ஆயில் மில் தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News