கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் நேற்று நடந்த ஜெ.கே., நியூரோ மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.;

Update: 2024-02-23 04:12 GMT

கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் நேற்று நடந்த ஜெ.கே., நியூரோ மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.


கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் நேற்று நடந்த ஜெ.கே., நியூரோ மருத்துவமனை திறப்பு விழாவிற்கு, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றினார். கலெக்டர் ஷ்ரவன்குமார், தொழிலதிபர்கள் முத்துசாமி, மணிமுன்னிலை வகித்தனர். கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜவேல் வரவேற்றார்.

மருத்துவமனையில், தலைவலி, பக்கவாதம், தலைசுற்றல், வலிப்பு, துாக்கமின்மை, முதுகெலும்பு உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பிரச்னைகள், பிசியோதெரப்பி, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று ஒருநாள் மட்டும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி பெருமாள், நகர செயலாளர் மலையரசன். ராஜகுருநாதன், சுமதி, தென்கீரனுார் ஊராட்சி தலைவர் வெண்ணிலா ஜெயபிரகாஷ், வழக்கறிஞர்கள் கோகுல்தாஸ், இளவரசு, ஜனார்த்தனன், சூரியக்குமார், பரசுராமன், டாக்டர்கள் காயத்ரி ஜெயக்குமார், கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News