கேத்தாண்டி பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பருவ துவக்க விழா

கேத்தாண்டி பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023_24 ஆண்டிற்கான அரவை பருவ துவக்க விழா நடைபெற்றது.

Update: 2023-11-30 09:29 GMT

அரவை தொடக்கம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இயங்கி வரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான அரவை ப் பருவ துவக்க விழா பூஜை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் தலைமையிலும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் பிரியா மற்றும் கரும்பு அபிவிருத்தி அலுவலர் ரமேஷ் நாராயணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இ

தனைத் தொடர்ந்து இந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு அரவை பருவத்தில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஊத்தங்கரை செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கரும்புகள் கரும்பு ஆலைக்கு கொண்டு வரப்பட்டு 1லட்சத்து 35 ஆயிரம் மெட்டிரிக் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மே

லும் 2023-24 ம் ஆண்டிற்கான அரவை பருவத்திற்கு திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தமிழ்நாட்டில் அதிக அளவாக டன் ஒன்றுக்கு 3318.95 பைசா ரூபாய் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் மாநில செயலாளர் முல்லை அளித்த பேட்டியில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் அறிவிக்க வேண்டிய ஊக்க தொகையை தமிழக அரசு இதுவரையில் அறிவிக்கவில்ல, கரும்பு டன்னிற்கு 4000 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், எனக்கேட்டு அனைத்து விவசாயிகளும் போராடி வருகின்றோம், ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் கரும்பிற்கான உரிய விலையை அறிவிக்காமல் ஏமாற்றி வருகிறது, மேலும் கரும்பு வெட்டு கூலி 1300 ஆக உள்ளது,

கரும்பு வெட்டுக்கூலி, உரக்கூலி, இடுப்பொருள் கூலி என அனைத்தும் சென்று விடுவதால், அரசு 5000 ரூபாயை விவசாயிகளுக்கு கொடுத்தாலும் போதாது, மத்திய அரசு விவசாய விரோத அரசாக செயல்படுகிறது, எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரையின் பேரில் சி+2 என்ற சொல்லக்கூடிய 1 1/2 மடங்கு விலையை அரசு உயர்த்தி தரவேண்டும், ஆனால் மத்திய அரசும், மாநில அரசும்

கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்தாமல், இருப்பதால் சர்க்கரை உற்பத்தி தடைபடும், கடந்த காலங்களில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தமிழகத்திலேயே இருந்தது, தற்போது 11 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டுமே உள்ளது, திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்த மூன்று சர்க்கரை ஆலைகளில் ஆம்பூர் சர்க்கரை ஆலை நிர்வாக காரணத்தினாலும், உற்பத்தி பற்றாகுறையினாலும், மூடப்பட்டு உள்ளது, மேலும் தற்போது மீதமுள்ள இரண்டு சர்க்கரை ஆலைகள் தினமும் உயிருக்கு தண்ணீர் விடுவது போல் நஷ்டத்தில் இயங்கி வருகிறது,

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி கரும்பு டன்னிற்கு 4000 ரூபாயை இந்த ஆண்டே அறிவிக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்...

Tags:    

Similar News