அரசு மகளிர் பள்ளியில் வானியல் மன்றம் துவக்க விழா
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு மகளிர் பள்ளியில் வானியல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வானியல் மன்ற துவக்க விழா நடந்தது. மாணவர்களிடையே வானியல் கருத்துக்களை பரப்பிட ஒவ்வொரு பள்ளிகளிலும் வானியல் மன்றங்கள் துவக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வானியல் மன்ற துவக்க விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன்,பள்ளிக் கல்வி துணை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வானியல் மன்ற ஆசிரியை ஒருங்கிணைப்பாளர் அம்பிகாவதி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு வானியல் மன்ற செயல்பாடுகள் குறித்தும்,தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தார்.
மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் வானியல் மன்றத்தை துவக்கி வைத்து மாணவிகளுக்கு கோள்கள் குறித்த விழிப்புணர்வு தொகுப்பு அட்டைகளை வழங்கி பேசினார். இதில் ஆசிரியை சகாய ஜெபி இன்பென்டா,உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை கிரேனா நன்றி கூறினார்.இதில் ஜீன் 22, 23ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் கோள்கள் திருவிழா குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.