ஆத்தூர் : ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் துவக்கம்

ஆத்தூரில் புதிய சேவை சங்கமாக ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2024-03-06 06:30 GMT

சேவை சங்கம் துவக்க விழா 

சேலம் மாவட்டம் ,ஆத்தூரில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் ,JCI, உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன இந்நிலையில் புதிதாக ஆத்தூர் பகுதியில் ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் துவக்க விழா நடைபெற்றது இந்த துவக்கு விழாவில் நிறுவனர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றதில் புதிய தலைவராகவும் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்ற சேவை சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய சங்கம் துவங்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற நிறுவனர் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு மற்ற சேவை சங்கத்தினர் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News