பாஜக சட்டமன்ற அலுவலக திறப்பு விழா
சங்ககிரியில் பாஜக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடந்தது.;
சங்ககிரியில் பாஜக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
சேலம் மாவட்டம்,சங்ககிரி குப்பனூர் பைபாஸ் சாலையில் பாஜக சட்டமன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் எஸ்.சுதீர்முருகன் தலைமை வகித்தார் . மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ்கார்த்திக் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத்தலைவர் வி பி துரைசாமி கலந்துகொண்டு பேசியதாவது திமுக தலைமையிலான அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒரு சதவீதம் கூட நிறைவேற்றவில்லை மேலும் மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி நம்முடைய வேட்பாளரை வெற்றி பெறுவதற்கு நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு பாடுபட வேண்டும் மேலும் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தாமரை சின்னத்தை வரைய வேண்டும் என்றும் அதனை அடுத்து பல்வேறு கட்சிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.
இதில் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், மண்டல தலைவர் முருகேசன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.