யானைக் குளியல் தொட்டி திறப்பு விழா
சங்கரன்கோவிலில் யானைக் குளியல் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது
Update: 2024-03-15 10:59 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைந்துள்ள கோமதி யானைக்கு குளியல் தொட்டி 26.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட யானை குளியல் தொட்டியை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகையா . திமுக நகர செயலாளர் பிரகாஷ் தென்காசி மாவட்ட பொருளாளர் சரவணன. சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.