ரிஷிவந்தியத்தில் அரசு பள்ளி கட்டிடம் திறப்பு
ரிஷிவந்தியத்தில் அரசு பள்ளியில் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-20 05:16 GMT
வாணாபுரம் அடுத்த அத்தியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 241 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர். இதையொட்டி, விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கி, கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர் பழனிமுத்து, பி.டி.ஓ., சவரிராஜன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், தலைவர் தனலட்சுமி கோவிந்தன், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தசரதன், ஆசிரியர்கள் முருகேஸ்வரி, பரமசிவம், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். இளையனார்குப்பம், தேவரடியார்குப்பம், காங்கியனுார், புஷ்பகிரி அரசு பள்ளிகளிலும் வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டது.