பெருமாள் மணிமேகலை கல்லூரியில் பசுமை திறன் ஆய்வகம் திறப்பு

ஓசூர் அருகே பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் தமிழகத்தில் முதல் முறையாக பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் திறக்கப்பட்டது. மாணவர்கள் இந்த ஆய்வகத்தின் மூலம் பசுமை திறன் பயிற்சியை மேற்கொண்டு வரும் காலங்களில் நல்ல வேலை வாய்ப்பு பெற வேண்டும் என மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-02-08 06:58 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தும் வகையில் பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் துவங்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் டிஎன்எஸ் இந்தியா அறக்கட்டளை ஆகியவை சார்பில் இந்த பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆய்வகங்கள் ஏற்கனவே தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக பெருமாள் மணிமேகலை கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பசுமை திறன் பயிற்சி ஆய்வகத்தில் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பசுமை திறன் சம்பந்தமான அடிப்படை பயிற்சி படிப்புகள் வழங்கப்படுகிறது. வரும் காலத்தில் இந்திய நாட்டில் பசுமை திறன் பயிற்சி படிப்பு சம்பந்தமான அதிக வேலை வாய்ப்புகள் மாணவர்களுக்கு உருவாகும் நிலை உள்ளது. எனவே மாணவர்கள் இந்த படிப்பினையும் பசுமைத்திறன் ஆய்வகத்தையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News