திண்டுக்கல் : அறிவுசார் மையம் மற்றும் நூலகம் திறப்பு
திண்டுக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;
Update: 2024-01-07 06:50 GMT
அறிவுசார் மையம்
திண்டுக்கல் நாகல்நகர் வாரசந்தையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட நுாலகம், அறிவுசார் மையத்தைமுதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து நாகல்நகரில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார்.பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன், பழநி நகராட்சி தலைவர்உமாமகேஸ்வரி, கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார், நகராட்சி கமிஷனர்கள் பாலமுருகன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் ஜான்பீட்டர், மாநகராட்சி உறுப்பினர் பவுமிதா பர்வீன் பாரூக் பங்கேற்றனர்.