ரூ.36.14 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குநீர் திட்டம் திறப்பு
மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கடக்கம் ஊராட்சி,காடம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.36.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுகுடிநீர் திட்டம் காணொளி காட்சி மூலம் திறப்பு;
Update: 2024-02-25 12:39 GMT
கூட்டுக்குநீர் திட்டம் திறப்பு
மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கடக்கம் ஊராட்சி,காடம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.36.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுகுடிநீர் திட்டம் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் உள்ள 32 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையால் ரூ.36.14 கோடி மதிப்பீட்டில் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் நீர் உறிஞ்சி கிணறுகள்,நீர் சேகரிப்புத் தொட்டி,நீர் உந்த அறை ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 26.38 கி.மீ நீளம் நீரேற்று குழாயும், 29.325 கி.மீ நீளம் நீர் உந்து குழாய் மற்றும் 7 இடைநிறுத்த தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருப்புங்கூர், மருதங்குடி ,புங்கனூர், நெம்மேலி, கன்னியாக்குடி, பெருமங்கலம். கற்கோவில் 7 ஊராட்சிகளை சேர்ந்த 32 கிராம குடியிருப்புகள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநிர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் ரவிசந்திரன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இளையபெருமாள்,ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் விஜயராகவன், சுபத்ரா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.