மயிலாடுதுறையில் லூர்து மாதா கெபி திறப்பு விழா

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தலத்தில் லூர்து மாதா கெபி திறப்பு விழா. ஏராளமானோர் பங்கேற்று உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்து வழிபாடு.

Update: 2024-03-19 17:38 GMT

கெபி திறப்புவிழா

மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக திகழ்ந்துவரும் புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல வளாகத்தில் மாதாவை போற்றும் வகையில் புதிதாக கட்டப்பட்ட புனித லூர்து அன்னை கெபி திறப்புவிழா நடைபெற்றது. விழாவிற்கு திருத்தல பங்கு தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ்ராஜ் அடிகளார் லூர்து மாதா கெபி கல்வெட்டை திறந்து வைத்து புனிதம் செய்தார். தொடர்ந்து, ஆலய வளாகத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து உலக மக்கள் பாதுகாக்கப்படவும், தீவிரவாதம் ஒழிந்து மனித நேயம் மலர்ந்திட வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர், பலிபீட சிறுவர்கள், பங்கு மக்கள் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிறசமயத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையில் செய்திருந்தார்.
Tags:    

Similar News