ஊத்தங்கரை அருகே பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா

ஊத்தங்கரை அருகே வெள்ளக்குட்டை,பாரதி நகரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.;

Update: 2024-03-14 08:14 GMT

வெள்ளக் குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக் குட்டை ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் ₹10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டி அதே பகுதியில் நியாய விலை கடையனை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர். சாகுல் ஹமீது ஒன்றிய செயலாளர்கள் வேங்கன், மாவட்ட, ஒன்றிய கிளை கழக செயலாளர்கள். கழக பொறுப்பாளர்கள் .கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News