கரூரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கரூர் மாநகர மேற்கு பகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-02 13:55 GMT

நீர் மோர் பந்தல் 

கோடை காலம் துவங்கியதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லனா துயருக்கு ஆளாகி வருகின்றனர். அதேசமயம், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பொதுமக்கள் நலன் கருதி ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை பகுதியில், கரூர் மாநகர மேற்கு பகுதி திமுக சார்பில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இன்று முதல் நாள் என்பதால், இளநீர், தர்பூசணி, கூல்ட்ரிங்ஸ், மோர், நீர் உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நீர்மோர் பந்தல் திறந்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக சார்பில் வழங்கப்பட்ட பானங்களை பருகி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News