பெருமாநல்லூரில் அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

பெருமாநல்லூர் நால் ரோட்டில் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-04-26 11:13 GMT

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாநல்லூர் நால் ரோட்டில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான புரட்சித்தமிழர். எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பங்கேற்று பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், நீர்மோர் ஆகியவை வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் புலுவபட்டி பாலு, மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் வேல்குமார்.எம்.சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மகாராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் பேசுகையில், சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை குறைக்க புரட்சித்தமிழர். எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது,

வெயில் காலம் முடியும் வரை தினம் தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பந்தலை தூய்மை செய்து பொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நீர்மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட உடலுக்கு குளிர் தரும் வகையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும், அனைத்து மக்களுக்கும் பயன்படக்கூடிய இயக்கம் அதிமுக மட்டும் தான், ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும்

இல்லாவிட்டாலும் என்றும் மக்கள் பணியில் அதிமுக செயல்படும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பேசினார்.

Tags:    

Similar News