காங்கேயத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

காங்கேயத்தில் நீர்மோர் பந்தலை பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்

Update: 2024-05-03 09:20 GMT

நீர்மோர் பந்தலை திறந்து வைத்த பொள்ளாச்சி ஜெயராமன் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அதிமுக நகர ஒன்றிய கழக சார்பில் இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான NSN.நடராஜ் மற்றும் காங்கேயம் நகரக் கழகச் செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்துகொண்டு நீமோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின்  பொதுமக்களுக்கு காக்க மோர் மற்றும் தர்பூசணி இளநீர் ஆகியவைகளை தினசரி வழங்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி வி.ஜெயராமன் காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலே மக்கள் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் கஷ்டப்பட்டு கொண்டுள்ளனர். ஒரு மாத காலமாக காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிதண்ணீர் வரவே இல்லை. இதேபோன்றுதான் வெள்ளகோவில் நகராட்சி,

தாராபுரம் நகராட்சி, சென்னிமலை பேரூராட்சி உட்பட அனைத்து கிராமங்களிலும் தண்ணீருக்கு தவியாய் தவித்துக் கொண்டுள்ளனர். மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம், கடும் வெயிலிலும் கட்டிடத் தொழில் வேலை நடப்பதில்லை, விவசாயி பணிகள் தண்ணீர் இல்லாததால் விவசாயக் கிணறுகள் வறண்டு போய் விவசாயம் பாதித்து, விவசாயத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தென்னை மரங்கள் அனைத்தும் காய்ந்து தொங்கிக் கொண்டுள்ளது.

காங்கேயம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நீர் இல்லாமல் தென்னை மரங்கள் வறண்டு வருகின்றது. காவிரியில் தண்ணீரை பெற்றுக் கொடுத்து குடிநீர் தாகத்தை தீர்க்க வேண்டிய நிலையில் ,அதேபோல பரப்பிக்குளம் ஆழியார் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி ஆனைமலை ஆறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றி விவசாயி உடைய தென்னை மரங்களை காப்பாற்ற வேண்டிய முதலமைச்சர் தேர்தல் முடிந்தவுடன் நேரடியாக குடும்பத்துடன் சென்று ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். மக்களோ கருகி வேதனையில் வெந்து, வெம்பி, வெந்தனனிலே சாய்ந்து கொண்டு இருக்கின்றனர்.

வெயிலிலே பல இடங்களிலே உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்திலே முதலமைச்சர் மட்டும் குடும்பத்தோடு சென்று கொடைக்கானலில் ஓய்வெடுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை போல கொடைக்கானலில் போய் கோல்ப் விளையாடி கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இதற்கெல்லாம் மக்கள் ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் போது சரியான பாடங்கள் கற்பிப்பார்கள். ஏழை அழுத கண்ணீர் கூர்மையான வாளுக்கு சமம் என தெரிவித்தார்.  மேலும் இந்நிகழ்ச்சில் காங்கேயம் ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News