பழவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் திறப்பு
பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-02-29 06:31 GMT
திறப்பு விழா
திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர கட்டிடம் அமைத்து தர சபாநாயகரிடம் ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிக்கு சபாநாயகர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இந்த நிலையில் பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.