புதிய நியாயவிலைக் கட்டிடம் திறப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் முழு நேர நியாய விலை கடைக்கான புதிய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம் எல் ஏ சுந்தர், எம்.பி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2024-01-02 08:09 GMT

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வது வார்டு பகுதியான சின்னசாமி நகரில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2020 - 21ன் கீழ் ரூபாய் 15.78 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.

மேலும் ரூபாய் ஆறு லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர், பொதுமக்கள் அமர மேடை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 49 வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் முன்னிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் இணைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து அரிசி , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மேலும் இவ்வாளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 800 குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு வேலை நேரத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்யும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மண்டல குழு தலைவர் சாந்திசீனிவாசன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி கழக செயலாளர் தசரதன், பொது விநியோகத் திட்ட அதிகாரி மணி, மேலாளர் சத்திய நாராயணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகர திமுக நிர்வாகிகள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News