மாரண்டஅள்ளியில் புதிய நவீன பேருந்து நிழற்கூடம் திறப்பு
மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனை அருகே தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரி மேம்பாட்டு நிதியிலிருந்து பொது மக்களுக்கு நவீன நிழற்கூடம் திறப்பு விழா
Update: 2024-03-13 04:17 GMT
தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனை அருகில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதியுடன் கூடிய பயணிகள் பேருந்து நிழற்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவ செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூர் கழகச் செயலாளரும், பேரூராட்சி தலைவர் எம்.ஏ.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி மணிவண்ணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எல்.ரவி, தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.