நெல்கொள்முதல் நிலையம் திறப்பு- மகிழ்ச்சியில் விவசாயிகள்
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.;
Update: 2024-02-02 05:34 GMT
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கபட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவின்பேரில் திருமழபாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கபட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கைத்தட்டி வரவேற்றனர். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.