உணவகம் மற்றும் சுகாதார வளாகம் திறப்பு
வேலூரில் புதிதாக கட்டப்பட்ட உணவகம் மற்றும் சுகாதார வளாகம் திறப்பு விழா நடைப்பெற்றது.;
Update: 2024-06-01 10:45 GMT
உணவகம் திறப்பு
வேலூர் கோட்டையை சுற்றிப் பார்க்கவும், ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தது. இந்த நிலையில் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தொல்லியல் துறை சார்பில் புதிதாக ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே ரூ.73 லட்சத்தில் உணவகம் மற்றும் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் அகல்யா தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.கலெக்டர் சுப்புலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவகம் மற்றும் சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார்.