கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
Update: 2024-02-25 01:46 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (24.2.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 1516 கோடியே 82 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ்,செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.