மாநில அளவிலான கிரிக்கெட்போட்டிகாஞ்சியில் துவக்கம்
காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளி மைதானத்தில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி துவங்கியது.;
Update: 2024-02-28 07:21 GMT
கிரிக்கெட் போட்டி
காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளி மைதானத்தில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி நேற்று துவங்கியது. இத்தொடரின் முதல் நாள் போட்டி, காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளிக்கும், பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையே நேற்று நடந்தது. வேலம்மாள் கல்வி குழும மண்டல தலைமை நிர்வாகி சாந்தி, பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், பள்ளி விளையாட்டு இயக்குனர் சடகோபான் சதீஷ் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். முதல் நாள் போட்டியில், காஞ்சிபுரம் வேலம்மாள் பள்ளி வெற்றி பெற்றது.