தமிழ்நாடு காலநிலை மாற்ற பயிற்சி பட்டறை துவக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட காலநிலை மாற்றம் பயிற்சிப் பட்டறை துவங்கியது.

Update: 2024-01-24 12:52 GMT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட காலநிலை மாற்றம் பயிற்சிப் பட்டறை துவக்கம்


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வனத்துறை சார்பில் மாவட்ட காலநிலை மாற்றம் பயிற்சிப் பட்டறையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் அமைத்துள்ள ஒரே மாநிலம் நமது தமிழ்நாடு மட்டும்தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

இந்தக் காலநிலை மாற்றம் என்பது நாம் சந்தித்துக் கொண்டிருக்கிற ஒரு சவாலான இடர்பாடு என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எந்தெந்த மாவட்டங்களில் எந்த வகையான இடர்பாடுகள் உள்ளது, எந்த வகையான சவால்கள் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கண்டறிவதற்காகவும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு தகவல்களை தெரிவித்து பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மாவட்ட அளவிலான இந்த பயிலரங்கம் நடைபெறுகிறது.

மாவட்டத்தின் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான செயல்திட்டங்களை வகுக்க இந்த பயிலரங்கம் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் , காலநிலை மாற்றம் கொள்கை வல்லுனர் அருள் பாண்டியன், அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்ற திட்ட வல்லுநர் முனைவர்.மலர்விழி;, மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News