புதியதாக கட்டப்பட்ட தீயணைப்பு அலுவலகம் திறப்பு
சங்கரன்கோவிலில் புதியதாக கட்டப்பட்ட தீயணைப்பு அலுவலகம் திறப்பு
Update: 2024-02-17 07:35 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் மு,க,ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, திமுக நகர செயலாளர் பிரகாஷ் தென்காசி மாவட்ட அலுவலர் பானுப்பிரியா. சங்கரன்கோவில் தீயணைப்பு அலுவலர் விஜயன் உள்ளிட்ட ஏராளமான தீயணைப்பு காவலர்களும் கலந்து கொண்டனர்.