கள்ளக்குறிச்சியில் பூங்கா திறப்பு விழா
கள்ளக்குறிச்சியில் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.;
Update: 2024-02-26 04:39 GMT
கள்ளக்குறிச்சியில் பூங்கா திறப்பு விழா
கள்ளக்குறிச்சி 10வது வார்டு, விநாயகா நகரில் 4,084 ச.மீ., பரப்பளவில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 258 மீ., நீளத்திற்கு நடைபாதை, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், எல்.இ.டி. மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் என அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.