வார சந்தை கட்டடம் திறப்பு விழா
கெடிலத்தில் நுழைவு வாயில் வளைவு, வார சந்தை கட்டடம் திறப்பு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 06:44 GMT
வார சந்தை கட்டடம் திறப்பு விழா
உளுந்துார்பேட்டை தொகுதி காட்டுசெல்லுார் ஊராட்சிக்குட்பட்ட கெடிலத்தில் வாரசந்தை கட்டடம் மற்றும் கலைஞர் நுாற்றாண்டு நுழைவு வாயில் வளைவு திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் ராஜவேல் தலைமை தாங்கினார்.கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் அமைச்சர் வேலு நுழைவு வாயில் வளைவு, வாரசந்தை கட்டடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், திட்ட இயக்குனர் தனபதி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, பி.டி.ஓ.,க்கள் சுமதி, ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், முருகன், நகர செயலாளர் டேனியல்ராஜ். திருக்கோவிலுார் நகரமன்ற தலைவர் சாந்தி இளங்கோவன், வர்த்தர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்லையா, இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆசீர்வாதம், ஊராட்சி தலைவர் நந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் கலா சுந்தரமூர்த்தி, மாவட்ட நிர்வாகி பழனிவேல், விக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.