புத்தக கண்காட்சி - ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்
புத்த கண்காட்சி டிசம்பர் 22 வரை நடைபெற உள்ளது
Update: 2023-12-16 04:49 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பு சார்பாக மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே, சம்பூரணி அம்மாள் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. தனியார் கல்லூரி நிர்வாகி ஜெயபிரகாஷ் ரிப்பன் வெட்டி புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் முதல் விற்பனையை தனியார் கல்வி நிறுவன நிர்வாகி ரவீந்திரன் தொடங்கி வைத்தார். புத்தக கண்காட்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு . பரிசாக புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விஜயகண்ணன், ஜி.ஹெச் தலைமை டாக்டர் பாரதி, குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி, இனியொரு விதி செய்வோம் பொதுநல அமைப்பின் நிர்வாகி கவிதா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் சத்தியசீலன் அனைவருக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கினார். இதில் ரவி, அன்பழகன், ராதிகா, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த புத்தக கண்காட்சி டிச. 22 வரை நடைபெறும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.